Thursday, March 11, 2010

News

யாழ்ப்பாணத்திலிருந்து கேதீஸ்வரத்திற்கு விசேட பஸ் சேவை
Thursday, 11 March 2010
News image

சிவராத்திரியை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் கேதீஸ்வரத்திற்கு விசேட பஸ் சேவைகள் நடத்தப்பட உள்ளதாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கோண்டாவில் சாலை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.வெள்ளிக்கிழமை காலையில் யாழ்ப்பாணம், காரைநகர், பருத்தித்துறை ஆகிய இடங்களிலிருந்து விசேட பஸ்கள் புறப்பட உள்ளதாகவும் மக்களின் தொகைக்கேற்ப ... Read more...

ஐ.நா செயலரின் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் எதிர்ப்பு என்கிறார் ஜி.எல். பீரிஸ்
Thursday, 11 March 2010
News image

இலங்கை நிலமை குறித்து நிபுணத்துவ ஆலோசனை வழங்குவதற்கு குழுவை நியமிக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் திட்டத்திற்கு பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் சில நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு  மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் ... Read more...

அவசரகாலச் சட்டத்தை நீக்கினால் 10000 புலிகளை விடுதலை செய்ய வேண்டி வரும் என்கிறார் மைத்திரிபால சிறிசேன
Thursday, 11 March 2010
News image

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்பதற்காக அவசரகாலச் சட்டத்தை நீக்கிவிட முடியாது. அவ்வாறு நீக்கினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 10,000 விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்ய வேண்டி வரும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன ... Read more...

யாழ்ப்பாணத்தில் ஆள் பிடிக்கும் நீலப் படையினர்
Wednesday, 10 March 2010
News image

தென்பகுதியெங்கும் மகிந்தவின் செல்வாக்கைப் பயன்படுத்தியும் அச்சுறுத்தியும் நீலப்படையணியை உருவாக்கியுள்ள நாமல் றாஜபக்ச யாழ்ப்பாண இளைஞர்களையும் இந்தப் படையணியில் இணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.இதற்காக ‘நீலப் படை ஆணி’ என்று தமிழ்க் கொலையுடன் கூடிய டீ சேர்ட்களை இளைஞர்களிடம் விநியோகித்து தமது படையணியில் இணைந்து ... Read more...

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் இராஜினமா
Wednesday, 10 March 2010
News image

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் N.பத்மநாதன் தனது பதவியை திடீரென இராஜினமாச் செய்திருக்கிறார். இவர் தனது இராஜினமாக் கடிதத்தை இன்றைய தினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களின் அழுத்தங்களைத் தொடர்ந்தே தான் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள N. ... Read more...

நளினி வழக்கு விசாரணையை இழுத்தடிப்பதாக நீதிமன்றம் குற்றச்சாட்டு
Wednesday, 10 March 2010
News image

நளினியின் விடுதலை தொடர்பான வழக்கை இழுத்தடிக்க வேண்டாம் என தமிழக அரசு தரப்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நளினி விடுதலை தொடர்பான ஆலோசனை குழு அறிக்கையை தாக்கல் செய்வதற்கு 2 வார கால அவகாசம் கேட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்களிடமே இந்த எச்சரிக்கை ... Read more...

சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பித்தலாட்டம்
Wednesday, 10 March 2010
News image

தூதரகத் தேவைகளுக்காக சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் உப அலுவலகத்திற்கு செல்லும் இலங்கைத் தமிழர்களிடமிருந்து மோசடியான வழியில் பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முறையிடுகின்றனர்.தூதரகக் கடமைகளைச் செய்வதற்குச் செல்லும் மக்களிடம் உங்களுடைய வேலையைச் செய்து முடிப்பதற்கு உள்ளே ... Read more...

இலங்கையில் விமான நிலையம் அமைக்க சீனா உதவி
Wednesday, 10 March 2010
News image

இலங்கையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்கு சீனா 190 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலகு கடன் அடிப்படையில் வழங்க இருக்கிறது.  இதற்கான ஒப்பந்தம் கடந்த நான்காம் திகதி சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கையெழுத்தாகியுள்ளது. இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் ... Read more...

பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு கோருகிறார் பிள்ளையான்
Wednesday, 10 March 2010
News image

நாட்டின் இனப் பிரச்சினைக்கான தீர்வாக பதின்மூன்றாவது திருத்தத்தை உடனடியாக அமுல் செய்யும் படியும் இதன் மூலமே இனப்பிரச்சினைக்கு நிலையான சமாதானத்தை எட்ட முடியும் என்றும் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.கட்சியின் பேச்சாளரான அசாத் மௌலானா ஊடகவியலாளர்களிடம் ... Read more...

இலங்கையின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவ பிரித்தானியா விருப்பம்
Wednesday, 10 March 2010
News image

பிரித்தானியா அரசாங்கத்தின் விசேட பிரதிநியாக இலங்கை வந்திருக்கும் பீட்டர் றிக்கட்ஸ், வடபகுதியில் இடம்பெறும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதற்கும் அம்மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான உதவிகளைச் செய்வதற்கும் பிரித்தானியா அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த ... Read more...

சீனத் தூதுவர் வவுனியா விஜயம்
Wednesday, 10 March 2010
News image

இலங்கையிலுள்ள சீனத் தூதுவர் நேற்றைய தினம் வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.சீனத் தூதுவர் வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸைச் சந்தித்து உரையாடியதோடு சீன அரசாங்கத்தினால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களையும் பார்வையிட்டதாக வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.இதனிடையே சீனத் தூதுவர் அடுத்த வாரம் ... Read more...

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை சந்திக்க இலங்கை தயார்
Wednesday, 10 March 2010
News image

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி சலுகைகளை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை தீர்மானித்திருப்பதாகவும் இதற்காக குழுவொன்று அடுத்த வாரம் பிறசல்ஸ் செல்ல உள்ளதாகவும் அமைச்சர் ஜி.எல. பீரிஸ் தெரிவித்தார்.திறைசேரியின் செயலாளர் ஜயசுந்தர, ஜனாதிபதியின் வெளிநாட்டுச் ... Read more...

சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் குறித்து அரசு தொடர்ந்து மௌனம்
Wednesday, 10 March 2010
News image

எதிர்வரும் பொதுத் தேர்தலைக் கண்காணிப்பதற்கு சர்வதேச மத்தியஸ்தர்களை அழைப்பது தொடர்பில் அரசு தொடர்ந்து மௌனமாகவே இருந்து வருகிறது.கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் 2 மாதங்களுக்கு முன்னரே சர்வதேச கண்காணிப்பாளர்களை அழைப்பது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான முறையான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் ... Read more...

ஆசியாவில் துணிச்சல் மிக்க நாடாக இலங்கை திகழும்
Wednesday, 10 March 2010
News image

எந்தவொரு சர்வதேச சக்திகளின் மிரட்டலுக்கும் அஞ்சாத துணிச்சல் மிக்க நாடாக இலங்கை திகழும் என்றும் அத்தகைய துணிச்சல் மிக்க தலைவர் ஒருவர் எமக்குக் கிடைத்துள்ளார் என்றும் அந்தத் தலைவரின் கரத்தைப் பலப்படுத்தும அரசாங்கம் ஒன்றை அமைக்க மக்கள் உதவ வேண்டும் என்றும் ... Read more...

அரசாங்கத்தின் அராஜகம் தலைவிரித்தாடுகிறது – றவூப் ஹக்கீம்
Wednesday, 10 March 2010
News image

தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்களின் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும் இந்தச் சம்பவங்களின் பின்னணியில் அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இருந்து வருவதாகவும் இந்த வன்முறைகளைத் தொடர்வதற்காகவே அவசரகாலச் சட்டம் தொடர்ந்து நீடிக்கப்படுகின்றது என்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம் ... Read more...

தெல்லிப்பளை வைத்தியசாலை பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து நீக்கம்
Wednesday, 10 March 2010
News image

தெல்லிப்பளை வைத்தியசாலை அமைந்துள்ள பகுதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து நீக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியா அறிவித்துள்ளார்.இன்றைய தினம் யாழ் நகரில் இராணுவத்தின் புதிய சிவில் நிர்வாக அலுவலகத்தை திறந்து வைத்த நிகழ்வில் அவர் இதனை அறிவித்தார்.இதனைத் தவிர பயிர் செய்கை ... Read more...

கிண்ணத்தில் யாராவது வென்றால் நான் பாராளுமன்றம் வரமாட்டேன் - மேர்வின் சில்வா
Tuesday, 9 March 2010
News image

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நான் கம்பஹா மாவட்டத்தில் வெற்றி பெறுவேன். ஆனால் கிண்ணத்தில் யாராவது வெற்றி பெற்றால் நான் பாராளுமன்றம் வர மாட்டேன் என ‘அடிதடி’ அமைச்சர் எனப் பெயர் பெற்ற மேர்வின் சில்வா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அவசரகாலச் சட்ட விவாதத்தின் ... Read more...

சம்பந்தர் அணியை ஏமாற்றிய இந்தியா
Tuesday, 9 March 2010
News image

இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார் என்பது பற்றிய செய்திகள் கடந்த வாரம் தமிழ் ஊடகங்களிலும், இந்திய அரசு சார்பு செய்தி நிறுவனங்களாலும் வெளியிடப்பட்டன. இச்செய்திகளில் நிருபமாவின் பயணம் பெருத்த எதிர்பார்ப்புக்களின் மத்தியில் நிகழவிருப்பதாகவும் அவர் ... Read more...

இலங்கையின் கோபத்தைத் தணிக்க பிரித்தானிய அதிகாரி செல்கிறார்
Tuesday, 9 March 2010
News image

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சைச் சேர்ந்த Sir Peter Rickets இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.உலகத் தமிழ் பேரவை மாநாடு தொடர்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையைத் தணிப்பதே இவரது விஜயத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.இரண்டு நாட்கள் இலங்கையில் ... Read more...

ஐநா செயலாளர் நிபுணர் குழுவை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு
Tuesday, 9 March 2010
News image

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு இலங்கை விவகாரம் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை அமைக்கும் திட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசும் போதே அவர் ... Read more...

-
+
6
  

விளம்பரம்

மாவீரர் துயிலுமில்லம்

Latest News

Login Form