Home | About Us | Heros | Contact Us

இணைய வழி மாவீரர் நினைவாலயம்

ஈழ மண்ணின் விடிவிற்காக தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்து களமாடி வித்தான மாவீரர்களின் நினைவாய் தமிழர் தாயகமெங்கிலும் மாவீரர் நினைவாலயங்கள் அமைக்கப்பட்டு அவை புனிதமாகப் பேணப்பட்டு வந்தமையும் தமிழ் உறவுகள் உணர்வு பூர்வமாக அந்த நினைவாலயங்களுக்குச் சென்று தமது வணக்கங்களை செலுத்தி வந்ததும் அனைவரும் அறிந்ததே.

தாயகத்தில் அண்மையில் ஏற்பட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து உலக நாகரீகங்களுக்கெல்லாம் முரணாக சிங்கள அரசாங்கத்தினால்; எமது மாவீரர் துயிலுமில்லங்கள் சிதைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாவீரர்கள் குறித்த நினைவுகளை தமிழ் மக்கள் மனங்களிலிருந்து முழுமையாக அழித்து விடலாம் எனத் தப்புக் கணக்குப் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலகம் பூராவும் உள்ள தமிழ் உறவுகள் மாவீரர்களுக்குத் தங்கள் வணக்கத்தைத் தெரிவிப்பதற்கும் மாவீரர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும் ஏற்ற வகையில் மாவீரர் நினைவாலயத்தை இணையத்தில் உருவாக்கி வருகிறோம். இதன் மூலம் தமிழ் மண்ணில் வீரகாவியமான எம் தமிழ் மறவர்கள் குறித்த விபரங்களை ஆவணப்படுத்தி வைப்பதுடன் மாவீரர்களுக்கு விளக்கேற்றி உங்கள் வணக்கங்களைத் தெரிவிப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாவீரர்கள் குறித்த உங்கள் நினைவுகள், தகவல்கள் போன்றவற்றையும் இத் தளத்தில் பதிவு செய்யக் கூடியதாக இருக்கும்.

17,500 இற்கு மேற்பட்ட மாவீரர்களின் விபரங்கள் இதுவரை தரவேற்றப்பட்டுள்ள இத்தளத்தில் அனைத்து மாவீரர்களின் விபரங்களையும் இணைக்கும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எமது தாயக மண்ணில் எமது மாவீரர்களின் கல்லறைகள் மீள நிர்மாணிக்கப்பட்டு அவர்களிற்கான நினைவு வணக்கங்களைச் செய்யும் நிலை வெகு விரைவில் வரும் என்ற நம்பிக்கையுடன் அதுவரை ஒரு பிரதியேற்பாடாக இந்த இணைய வழி மாவீரர் துயிலும் இல்லம் இருக்கும்.

அனைத்துத் தமிழ் மக்களிடமும் ஒரு அன்பான வேண்டுகோள்!

எமக்காகவும் எம் மண்ணை மீட்க வேண்டும் என்பதற்காகவும் தம்மையே அர்ப்பணித்த எம் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காகவும் அவர்கள் குறித்த தகவல்களைப் பதிவு செய்து வைப்பதற்காகவுமே அமைக்கப்பட்டுள்ள இந்த மாவீரர் துயிலுமில்லத்தை எந்தவொரு அரசியற் தேவைகளுக்காகவும் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தாயக மண்ணில் எம் மாவீரர்களின் துயிலுமில்லங்கள் மீள அமைக்கப்பட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் சூழலை ஏற்படுத்தும் முயற்சியின் முதற்படியாய் இந்த இணையத்தளம் அமையும்.

மாவீரர்களின் நினைவாய் அமைக்கப்பட்டுள்ள இந்த மாவீரர் துயிலுமில்லத்தில் இது வரை 17,500 இற்கும் மேற்பட்ட மாவீரர்கள் தொடர்பான தகவற் கொத்து இணைக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவீரர்கள் தொடர்பான விபரங்களை இணைப்பதற்கும் தற்போதுள்ள மாவீரர்களின் புகைப்படங்களை செம்மைப்படுத்தி அவர்களது கல்லறைகளில் இணைப்பதற்குமான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்காக உங்கள் பங்களிப்புகளையும் எதிர்பார்க்கிறோம்.

நிர்வாகி
EelamWeb இணையத்தளம்

EelamWeb © is aimed at rebuilding Tamil Eelam, the traditional home land of the Tamils, which has been ravaged by the genocidal policies that have been undertaken by successive Sinhala dominated Sri Lankan governments.

The mass human rights abuses committed by the Sri Lankan government and its forces are done so in the cover of a complete censorship of all information concerning Tamils in Tamil eelam. Due to the sufferings that Tamil people are facing in their own home land, we, at EelamWeb have found this page a necessity to expose the terror of the Sri Lankan government and its forces.

Culture is the heart of any civilization and it gives us a great responsibility as Tamils living outside of Tamil Eelam and free of suppression by the Sri Lankan government, to take the initiatives to showcase the rich culture and tradition of Tamil Eelam.

EelamWeb shall strive to provide as much literature regarding the Tamil freedom struggle that has been published over the years by various Tamil scholars. At the same time, we shall also provide information relating to the tradition and culture, which the Tamils of Tamil Eelam have struggled to safe guard despite the various methods of suppression by the Sri Lankan government.

Home | About Us | Heros | Contact Us

Tamil Movies
Tamil Radio
Tamil Radio